மணிரத்னம் பட நடிகையின் அபார்ட்மெண்டுக்கு கொரோனாவால் சீல்? பரபரப்பு தகவல்

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா என்று கூறியதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’உயிரே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’தக்க தய்ய தய்யா’ என்ற பாடல்தான். இந்தப் பாடலில் மலைக்கா அதிர வைக்கும் வகையில் நடனம் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலைக்கா அரோரா தனது குழந்தையுடன் மும்பையில் உள்ள பந்த்ரா என்ற பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து மலைக்கா அரோரா தனது மகனுடன் தனிமைப் படுத்திக் கொண்டார்.

இதனிடையே மலைக்கா அரோரா வசித்து வரும் அப்பார்ட்மெண்ட் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அவர் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் சீல் வைக்கப்படவில்லை என்றும் அப்பார்ட்மெண்ட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாகவும் மும்பை மாநகராட்சி தகவல்கள் தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் அனைவருமே தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.