close
Choose your channels

கணவர் ரவீந்தர் பிறந்தநாளுக்கு 6 அடி உயரத்தில் பரிசு கொடுத்த மகாலட்சுமி.. வைரல் வீடியோ..!

Sunday, July 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

திருமணத்திற்கு பின் கணவருடன் இருக்கும் பல க்யூட் புகைப்படங்களை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் அவை வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவீந்தர் பிறந்த நாளை அடுத்து தனது கணவருக்கு 6 அடியில் சிறப்பு பரிசு கொடுத்த வீடியோவை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சிறப்பு பரிசு ரவீந்தர் போலவே இருக்கும் 6 அடி உயர பெயிண்டிங் ஓவியம் ஆகும். இதைத்தான் அவர் தனது கணவருக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார்.

இந்த பதிவில் ’எனக்கு மீண்டும் தைரியத்தை கொண்டு வந்த இந்த மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் தான் என் உறுதி. அதற்காக என்றும் நான் நன்றி உடையவளாக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். 6 அடி உயர இந்த புகைப்படத்தை வழங்குவதன் மூலம் இந்த நாள் சிறப்பானதாக மாறி உள்ளது, நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இந்த புகைப்படம் நன்றாக வந்து இருக்கிறது’ என்று மகாலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment