மகாலட்சுமி கணவர் தயாரிப்பாளர் ரவீந்தர்  சந்திரசேகர் திடீர் கைது.. என்ன காரணம்..!

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

நடிகை பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் திடீரென நேற்று கைது செய்யப்பட்டு இருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேர்ந்த பாலாஜி கபா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை காவல் நிலைய ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் ரவீந்தர் சந்திரசேகர் தன்னிடம் நகராட்சி திட கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் குறித்து கூறியதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என்றும் ஆசை கூறினார்.

அதை நம்பி 16 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் அவர் கூறியது போல் பவர் ப்ராஜெக்ட் திட்டம் ஆரம்பிக்காமல் ஏமாற்றியதால் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டேன். ஆனால் அவர் எனக்கு மிரட்டல் விடுத்தார் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில் போலி ஆவணங்களை தயார் செய்து, திடக்கழிவு ஆற்றலாக மாற்றுதல் திட்டம் குறித்து பாலாஜியிடம் கூறி அவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரரை கைது செய்தனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கடந்த ஆண்டுதான் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சீரியலுக்காக பேசிய வசனம் உண்மையான சோகம்.. ஜி மாரிமுத்துவின் வீடியோ வைரல்..!

பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அவர் 'எதிர்நீச்சல்' சீரியலுக்காக பேசிய வசனத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டப்பிங் பேசும் போது மாரடைப்பு.. தானே காரை ஓட்டி மருத்துவமனைக்கு சென்ற ஜி மாரிமுத்து..!

பிரபல குணச்சித்திர நடிகர் மாரிமுத்து டப்பிங் பேசும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.  

'எதிர்நீச்சல்' நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் 'எதிர்நீச்சல்' சீரியலில் முக்கிய கேரக்டரில்   நடித்த ஜி மாரிமுத்து திடீரென காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை

WWE வீரர்களுடன் நடித்த கார்த்தி.. எந்த படத்திற்காக தெரியுமா?

நடிகர் கார்த்திக் நடித்த 'ஜப்பான்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவர்  நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தில் 15 வருடங்களுக்கு பின் இணைந்த ஜோடி..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகிய 'இறைவன்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்