நடிகை மகாலட்சுமிக்கு தம்பி இருக்கின்றாரா? அக்காவுக்கு தெரிவித்த வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் தனது முதல் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் என்பதை பார்த்தோம்.
மகாலட்சுமி கணவர் ரவீந்தர், மனைவியின் பிறந்தநாளைமுன்னிட்டு மல்லிகைப்பூ வாங்கி கொடுத்தார் என்றும் அது விலைமதிப்பில்லாத பரிசாக தான் கருதுவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும் வகை வகையான இனிப்புகளையும் ரவீந்தர் தனது மனைவிக்கு வாங்கி கொடுத்திருந்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மகாலட்சுமிக்கு அவரது சக நடிகர், நடிகைகள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த நிலையில் அவருடைய சகோதரரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு சிறுவயதில் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து தனது சகோதரரின் வாழ்த்துக்கு மகாலட்சுமி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை அடுத்தே மகாலட்சுமிக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என்பது பலருக்கு தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com