நாங்கள் சில ரகசியங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்: மேக்னாராஜின் வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆக்சன் கிங் அர்ஜுன் சகோதரரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் அப்போது நான்கு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தனது கணவரே மீண்டும் குழந்தையாக பிறந்து வந்ததாக கருதும் மேக்னாராஜ் அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த பதிவுகள் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைக்கு சீக்ரெட் ஒன்றை சொல்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கூறியதாவது:
தினமும் எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை போலவும், ஒவ்வொரு நாள் இரவும் எங்களுக்கு சனிக்கிழமை இரவு போலவும் இருக்கிறது. தாய்மையின் சின்னச் சின்ன சந்தோஷங்களை நான் அனுபவிக்கிறேன். நாங்கள் ஒருவருக்கொருவர் ரகசியங்களையும் பகிர்ந்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில நிமிடங்கள் ஆகியுள்ள நிலையில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments