மறைந்த கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை!

பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் சகோதரருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிரஞ்சீவி சார்ஜா காலமானபோது நடிகை மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார் என்பதும், விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மேக்னாராஜ்க்கு வளைகாப்பு வைபவம் நடத்தப்பட்டு உள்ளது.

கணவர் உயிருடன் இல்லாததால் கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்துக் கொண்டு அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து ’ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்றும் ’நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்’ என்றும் அவர் மிகவும் உருக்கமாக அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவு செய்துள்ளார்.

மறைந்த கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய மேக்னா ராஜின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.