இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்: பிக்பாஸ் நடிகையின் கொரோனா விழிப்புணர்ச்சி வீடியோ
- IndiaGlitz, [Tuesday,March 24 2020]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மதுமிதா தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
தற்போது நாம் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். பொருளாதார ரீதியாகவும் மக்கள் உயிர்பலி அதிகரிப்பு காரணமாகவும் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போயுள்ளன. இந்த நோய் பரவாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு முறை கையை கழுவ வேண்டும். கையை கழுவாமல் வாய் மூக்கு ஆகியவற்றை கைகளால் தொடக் கூடாது. தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்
இதை விட மிகவும் முக்கியமானது ஒன்று. அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 144 தடை உத்தரவை தலையாய கடமையாக எடுத்து தயவுசெய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மிக அத்தியாவசியமான பொருள் தேவைப்பட்டால் மட்டும் வீட்டில் இருக்கும் ஒரு நபர் வெளியே வந்து தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளவும்
சிலர் விளையாட்டுக்காக 144 தடை உத்தரவை மீறினால் என்ன நடக்கும் என்று நினைப்பதுண்டு. ஒருசிலர் தடை உத்தரவின்போது நமது நகரம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன் வருவார்கள். தயவுசெய்து ரிஸ்க் எடுக்க வேண்டாம். நீங்கள் எடுக்கும் ரிஸ்க் மூலமாக நம்முடைய அன்பான குடும்பம், குழந்தைகள், பொதுமக்கள் அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஒருவருக்கு இந்த நோய் வந்தாலும் கூட எத்தனை பேருக்கு பரப்ப முடியும் என்பதை நாம் தினம் தினம் செய்திகளில் பார்த்து வருகிறோம். எனவே அனைவரும் வீட்டில் இருங்கள், அன்பான குடும்பத்துடன் செலவிடுங்கள். எந்த காரணத்தை முன்னிட்டும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று மதுமிதா கூறியுள்ளார்
My opinion about 144 in Tamilnadu #TamilNadulockdown #CoronavirusLockdown#Corona@johnmediamanagr pic.twitter.com/6FJ7Xy9Kuo
— Actor Madhumitha (@ActorMadhumitha) March 24, 2020