ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கப்பட்ட மகன்கள்: மனித உரிமை ஆணையம் சென்ற தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,September 23 2020]

தமிழ் நடிகை ஒருவரின் இரண்டு மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியதை கண்டித்து,ம் அந்த நடிகை மனித உரிமை ஆணையத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 2004ஆம் ஆண்டு வெளிவந்த ’குடைக்குள் மழை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சத்தியராஜின் ’இங்கிலீஷ்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மதுமிதா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிவபாலாஜியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு தன்வின் கங்குலா, ககன் கங்குலா ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மதுமிதாவின் மகன்களான தன்வின் கங்குலா, ககன் கங்குலா ஆகிய இருவரும் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

இந்நிலையில் பள்ளி கட்டணங்களை குறைக்கும்படி மதுமிதாவும் அந்த பள்ளியில் படிக்கும் ஒருசில மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கூட்டாக அனைவரும் பள்ளி நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பி உள்ளனர் என்பதும் வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென பள்ளி நிர்வாகம் எந்த காரணமும் சொல்லாமல் மதுமிதாவின் இரண்டு குழந்தைகளையும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு மதுமிதா மெயில் அனுப்பியும் பள்ளி நிர்வாகம் அதற்கு பதில் இல்லை. இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை மதுமிதா இந்த பிரச்சனையை தான் மனித உரிமை ஆணையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகத்திடம் கட்டணங்களை குறைக்க மட்டுமே கோரியதாகும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மதுமிதாவின் கணவர் சிவலாபாஜியும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகை ஒருவரின் மகன்களை பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது