close
Choose your channels

90களில் ஹிட் நாயகி… மகள்களுடன் இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

Saturday, August 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “அழகன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மதுபாலா. பின்பு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான “ரோஜா” திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் கட்டிப்போட்டார். இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான “ஜென்டில்மேன்“ எனப் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தமிழைத் தவிர நடிகை மதுபாலாவிற்கு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப்பல மொழிகளில் பட வாய்ப்புக்கள் குவிந்துகொண்டே இருந்தன. இதனால் 90 களில் கொடிக்கட்டி பறக்கும் பிசியான நடிகையாகவே வலம்வந்தார். பின்னர் பாலிவுட் பிரபல நடிகையான ஹேமமாலினியின் உறவினர் ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது 2 பெண் குழந்தைகளுடன் சந்தோஷமான வாழ்க்கையை நடத்திவரும் அவர் தன்னுடைய மகள்களான அமேயா, கீயா ஆகியோர்களின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “அம்மாவிற்கே செம டஃப் கொடுப்பாங்க போல’‘ எனப் பாராட்டி வருகின்றனர்.

90 களில் பல மொழிகளில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை மதுபாலா சமீபத்தில் வெளியான நடிகர் துல்கர்சல்மான் நடிப்பில் வெளிவந்த “வாயை மூடிப்பேசவும்” திரைப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்து இருந்தார். அதையடுத்து “தலைவி” திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை மதுபாலா தனது மகள்கள் அமேயா, கீயா ஆகியோர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டு கமெண்டுகளை பெற்று வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment