நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? விரைவில் ஹீரோயின் ஆவார்களா?

உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை மதுபாலாவின் மகள்கள் தனது தந்தைக்கு வாழ்த்து கூறிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுபாலா பதிவு செய்துள்ளார்.

கே பாலச்சந்தர் இயக்கிய ’அழகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் மதுபாலா. அதன்பின் மணிரத்னம் இயக்கிய ’ரோஜா’ ஷங்கர் இயக்கிய ’ஜென்டில்மேன்’ உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ‘தலைவி’ திரைப்படத்தில் ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும், தற்போதும் அவர் கன்னட மலையாள தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை மதுபாலா கடந்த 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அமையா, கெயா மற்றும் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மதுபாலா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சற்று முன் தனது மகள்கள் இருவரும் தங்களது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக் கூறிய புகைப்படத்தை மதுபாலா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என்றும், விரைவில் ஹீரோயின்களாக பார்க்கலாமா? என்றும் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 எப்போது? செல்வராகவன் பதில்!

செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'புதுப்பேட்டை' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு செல்வராகவன் பதில் அளித்துள்ளார். 

'ஆர்.ஆர்.ஆர்' நாயகனுடன் இணையும் வெற்றிமாறன்: வாடிவாசலுக்கு அடுத்து இந்த படம் தான்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்த பிரபல நடிகருடன் வெற்றிமாறன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

நயன்தாராவுடன் ஹனிமூன் எந்த நாட்டில்? விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், ஹனிமூன் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடிப்பது உண்மையா? சிவராஜ்குமார் பேட்டி

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடிப்பது உண்மையா? என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்திக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்: என்ன காரணம் தெரியுமா?

 உலக நாயகன் கமல்ஹாசன், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.