அம்மாவுக்கு பெருமை தேடி கொடுத்த நடிகை மாதவியின் மகள்.. என்ன செஞ்சிருக்கார் பாருங்க..!
- IndiaGlitz, [Tuesday,June 27 2023]
தமிழ் திரையுலகில் கடந்த 80 களில் கனவு கன்னியாக இருந்த நடிகை மாதவியின் மகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் அவருக்கு உலகின் இரண்டு சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து மேல் படிப்பு படிக்க அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
’புதிய தோரணங்கள்’ என்ற திரைப்படத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மாதவி. அதன் பிறகு ரஜினியின் ’தில்லுமுல்லு’ ’தம்பிக்கு எந்த ஊரு’ ’விடுதலை’ ஆகிய படங்களிலும் கமல்ஹாசனின் ’ராஜபார்வை’ ’டிக் டிக் டிக்’ ’எல்லாம் இன்பமயம்’ ’சட்டம்’ ’காக்கிச்சட்டை’ உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை மாதவி கடந்த 1996 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரால்ப் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர் என்பதும் தற்போது மாதவி தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் நியூஜெர்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை மாதவியின் மகள் பிரிசில்லா இளங்கலை பட்டம் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஆன ஹார்வாட் மட்டும் ஆக்ஸ்போர்டு ஆகியவற்றில் இருந்து மேல் படிப்பு படிக்க அழைப்பு வந்துள்ளதாக தெரிகிறது.
தனது மகளின் படிப்பு குறித்தும், மதிப்பெண் குறித்தும் ஒரு அம்மாவாக தான் பெருமைப்படுவதாக மாதவி கூறியுள்ளார். அம்மாவுக்கு பெருமை சேர்த்துள்ள மாதவியின் மகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் பிரிசில்லா தனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் இருக்கும் புகைப்படங்களை மாதவி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் மாதவிக்கு இவ்வளவு அழகான மகள்களா? என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.