மகளை கல்லூரியில் சேர்க்க மோசடி: பிரபல நடிகைக்கு ஜெயில் மற்றும் ரூ.3.74 கோடி அபராதம்

  • IndiaGlitz, [Saturday,August 22 2020]

மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகை மற்றும் அவருடைய கணவருக்கு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.3.74 கோடி அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை லோரி லாஹ்லின். இவர் பல ஆங்கில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவரும் இவருடைய கணவரும் சேர்ந்து தங்களுடைய மகளை சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்கள் மகளுக்கு சீட் கிடைக்க போலியான ஆவணங்களை தயார் செய்தது உறுதிசெய்யப்பட்டது.

இதனை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் நடிகை லோரி லாஹ்லின் அவர்களுக்கு இரண்டு மாத ஜெயில் தண்டனையும் அவரது கணவருக்கு 5 மாத ஜெயில் தண்டனை விதித்துதோடு இருவருக்கும் சேர்த்து 5 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூபாய் 3.74 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடிய தமிழக முதல்வர்!!!

இந்து மதத்தில் பிரதான தெய்வமாக மதிக்கப்படும் விநாயகப் பெருமானின் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும்

சூரரை போற்று ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சூர்யா!

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகிய 'சூரரை போற்று' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி ஒருசில மாதங்கள் ஆகியும், ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்காததால் ரிலீஸ் செய்ய முடியாத நிலை

ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது பட டைட்டில் அறிவிப்பு!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 2010 ஆம் ஆண்டில் 'நீதான் அவன்' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னரும் 'அட்டகத்தி' 'ரம்மி' 'திருடன் போலீஸ்' 'காக்கா முட்டை'

கைலாஷா நாட்டின் நாணயத்தை வெளியிட்டார் நித்தி: காமெடியின் உச்சகட்டம் அரங்கேறியதா?

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாஷா நாட்டின் நாணயத்தை வெளியிடப்போவதாகவும், உள்ளூர் மக்களுக்காக ஒரு நாணயமும் வெளிநாட்டு பரிவர்த்தனைக்காக