close
Choose your channels

நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இவர்? வைரல் புகைப்படங்கள்!

Thursday, September 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், காமெடியன், குணசித்திர கேரக்டர் என பல்வேறு கேரக்டரில் நடித்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா, தற்போது தொலைக்காட்சி சீரியலில் பிசியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

விஜயகாந்த் நடித்த ’பூந்தோட்ட காவல்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். குறிப்பாக இவர் ரம்பாவுடன் நடித்த ’சுந்தர புருஷன்’ என்றதிரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் லிவிங்ஸ்டன், ஜெஸ்ஸி என்பவரை கடந்த 1997ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவருக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மு ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் ஜோவிதா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ’பூவே உனக்காக’ என்ற தொடரில் நடித்து வந்த இவர் திடீரென அந்த தொடரில் இருந்து ஒரு சில காரணங்களால் விலகிவிட்டார்

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜோவிதா அழகான புகைப்படங்களை பதிவு செய்தார் என்பதும், அவை வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவருக்கு புதிய சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த சீரியலில் அவருக்கு வித்தியாசமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment