close
Choose your channels

எம்.ஜி.ஆரோடு யாரையும் ஒப்பிட முடியாது: ரஜினி குறித்து நடிகை லதா

Thursday, January 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்ஜிஆர் மற்றும் ரஜினி ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்த மிகச்சில நடிகைகளில் ஒருவர் என்ற பெருமையை பெற்றவர் நடிகை லதா. ரஜினியுடன் நீண்ட கால நட்புடன் இருக்கும் லதா, ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் எம்ஜிஆருடன் ரஜினியை ஓப்பிடலாமா? என்ற கேள்விக்கு பதிலளித்த லதா கூறியதாவது:

எம்.ஜி.ஆரோடு யாரையும் ஒப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் குணம், தனித்தன்மைகள் உண்டு. ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆரை போலவே ரஜினி பழகுவதற்கு எளிமையானவர். நல்ல மனிதர். எம்.ஜி.ஆர். மனித நேயம் மிக்கவர். பிறருக்கு உதவும் குணம் உள்ளவர். ரஜினிக்கும் அதே குணம் உண்டு. எம்.ஜி.ஆருக்கு எப்போதும் தலைக்கனம் இருந்தது இல்லை. இப்போது இரண்டு படங்களில் நடித்துவிட்டாலே அவர்களை பிடிக்க முடிவதில்லை. ஆனால், ரஜினிகாந்த் இவ்வளவு புகழடைந்தபோதும் மிகவும் எளிமையான மனிதர்' என்று கூறினார்.

மேலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து கூறியபோது, 'ஆன்மிக அரசியல் என்றால் நேர்மையான, நியாயமான, நாணயமான, சாதி, மதச்சார்பற்ற அரசியல் என்று ரஜினி விளக்கம் அளித்திருக்கிறார். திராவிட கட்சிகளில் ஒரு காலத்தில் நாத்திகவாதம் மேலோங்கி இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே இப்போது வெளிப்படையாக சாமி கும்பிடுகிறார்கள். அது மதவாதமா? என்று நடிகை லதா கூறியுள்ளார்

ரஜினி கட்சியில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு 'குழந்தையே இன்னும் பிறக்கவில்லை அதற்குள் பெயர் வைக்க சொன்னால் எப்படி? என்று புன்சிரிப்புடன் பதிலளித்துள்ளார் லதா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment