காணாமல் போய் 5 நாட்கள் ஆகியும் கிடைக்காத லலிதகுமாரியின் உறவுப்பெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் பேத்தியும், நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் மகளுமான அபிர்ணா சமீபத்தில் காணாமல் போனார் என்பதையும் அவரை பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனே 9176617337 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் அபர்ணா இன்னும் கிடைக்காத காரணத்தால் அவரது பெற்றோர் கண்ணீர் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதுகுறித்து நடிகை லலிதகுமாரி கூறியதாவது: எனது சகோதரரும் சினிமா உதவி இயக்குனர் அருண் மொழி வர்மன் -செரில் தம்பதியின் மூத்த மகள் அப்ரீனா 17 வயது பனிரெண்டாம் (+2) வகுப்பு படிக்கிறார், கடந்த 6ஆம் தேதி முதல் காணாமல் போய் இன்றோடு 5 நாட்கள் ஆகின்றது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதன் பேரில் அவர்கள் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்கள் ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றி விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை காவல் துறைக்கும் போதிய ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை பள்ளி மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது. இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஊடகங்கள் மூலம் என் அண்ணன் மகள் அப்ரினா கிடைப்பால் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்று லலிதகுமாரி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com