நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இவர்? ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

’பிரிவோம் சந்திப்போம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர், ‘ஈரம்’ ’வேட்டைக்காரன்’ ’ஆதவன்’ ’ராவணன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்பது தெரிந்ததே. மேலும் இவர் ’ஆரோகணம்’ ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’அம்மணி’ ’ஹவுஸ் ஓனர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் மாடர்ன் டிரஸ்சில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் கேப்ஷனாக தான் உடல் எடையை வெகுவாக குறைத்து உள்ளதாகவும் இதனால் தான் மன உறுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதையேதான் தொடர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இதுவரை பார்க்காத மாடர்ன் உடையில் லட்சுமி ராமகிருஷ்ணனை பார்த்த ரசிகர்கள் லட்சுமி ராமகிருஷ்ணா இவர்? என்று ஆச்சரியத்தில் மூழ்கி கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.