'மங்காத்தா' பட நடிகையின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’மங்காத்தா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை லட்சுமிராயின் தந்தை ராம்ராய் என்பவர் காலமானார். இதனையடுத்து தனது தந்தையார் இழப்பு குறித்து லட்சுமிராய் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக கூறியிருப்பதாவது:
எனது தந்தையின் இழப்பை ஒருபோதும் என்னால் ஈடுசெய்ய முடியாது. ஆனாலும் இந்த இழப்புடன் வாழ நான் கற்றுக்கொள்வேன். உங்களை போல யாரும் என்னை நேசிக்க முடியாது. என் இதயம் உண்மையில் வேதனையில் உள்ளது. உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை, மன்னிக்கவும். எல்லாம் சரியாகிவிடும் என்று என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கின்றீர்கள். அதை இந்த விஷயத்திலும் எடுத்து கொள்கிறேன். உங்களால் நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மகள் ஆனேன். நான் சுதந்திரமாகவும் வலுவாகவும் இருக்க விரும்பினேன். அது உங்களால் தான். உங்கள் இழப்பை ஈடுகட்ட எனக்கு வலிமை தேவை என்று உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் மேலே இருந்து ஆசீர்வாதங்களையும் தருவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் என்னை முழுமையாக நம்புனீர்கள். உங்களுடைய விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன். ஒரு பொன்னான இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. என் வாழ்க்கையின் மிக இருண்ட தருணம் இது. கடினமாக உழைக்கும் உங்களை கடவுள் விரும்பி எடுத்து கொண்டார். எப்போதும் எங்களை சுற்றி நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்கிறோம். எங்கள் இதயத்தால் எப்போதும் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்’ என்று உருக்கமாக லட்சுமிராய் பதிவு செய்துள்ளார்.
தந்தையை இழந்து வாடும் லட்சுமிராய்க்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments