கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து கூறிய ஜோதிகா பட நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இவர் நடிகை லட்சுமி பிரியா என்பவரின் நெருங்கிய உறவினர் என்ற தகவலும் வெளிவந்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பாக சென்னையை பின்னணியை கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அடுத்த துணை அதிபராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி இந்தியர்கள் அனைவரையும் கொண்டாட வைத்தது.
இந்த நிலையில் ஜோதிகா நடித்த ’காற்றின் மொழி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவரும் பிரபல தெலுங்கு நடிகையுமான லட்சுமி மஞ்சு தனது சமூக வலைத்தளத்தில் ’கமலா ஹாரீஸ்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல்முறையாக அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெருமையாக இருப்பதாகவும் அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துவதாக லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார். லட்சுமி மஞ்சுவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
It’s amazing to witness the first woman from an Indian origin, #KamalaHarris, being nominated for the vice presidential candidate in USA. I wish you all the success! pic.twitter.com/uPQckdRAU7
— Lakshmi Manchu (@LakshmiManchu) August 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments