'பாகுபலி' சிவகாமி கேரக்டரில் ஏன் நடிக்கவில்லை. பிரபல நடிகை பேட்டி

  • IndiaGlitz, [Thursday,October 27 2016]

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி' கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரான சிவகாமி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் மிகவும் கம்பீரமாக நடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.
ஆனால் முதலில் இந்த கேரக்டருக்கு இயக்குனர் ராஜமெளலி ஸ்ரீதேவி மற்றும் தபுவைத்தான் அணுகினார். அவர்கள் இருவரும் மறுத்துவிட்ட நிலையில் ராஜமெளலியின் அடுத்த சாய்ஸ் பிரபல நடிகை லட்சுமி மஞ்சுவாக இருந்ததாம்.
சிவகாமி கேரக்டர் மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் பிரபாஸ் மற்றும் ராணாவுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு தனக்கு வயது பொருத்தமாக இல்லாததால் சிவகாமி கேரக்டரில் தான் நடிக்கவில்லை என்று லட்சுமிமஞ்சு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.,