close
Choose your channels

நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? வைரல் வீடியோ..!

Friday, July 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் சிரிப்பழகி லைலா தனது குடும்பத்துடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவருடைய மகன்களை பார்த்த ரசிகர்கள் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என்று ஆச்சரியத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை லைலா விஜயகாந்த் நடித்த ’கள்ளழகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் ’முதல்வன்’ ’பார்த்தேன் ரசித்தேன்’ ’கம்பீரம்’ ’கண்ட நாள் முதல்’ ’பரமசிவன்’ ‘தீனா’ உள்பட திரைப்படங்களில் நடித்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் கார்த்தியின் ‘சர்தார்’ என்ற திரைப்படத்தில் நடிகை லைலா நடித்தார் என்பதும் தற்போது அவர் ’சப்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லைலா கடந்த 2006 ஆம் ஆண்டு ஈரான் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் லைலா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் குடும்பத்துடன் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிடும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவரது கணவர் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என்று ஆச்சரியத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment