விஜய்க்கு புதிய வாழ்க்கை.. புதிய ஆரம்பம்.. நடிகை லைலாவின் ஜாலியான பேட்டி..!

  • IndiaGlitz, [Saturday,June 15 2024]

நடிகர் விஜய் இன்னும் ஒரு வாரத்தில் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கை ,புதிய ஆரம்பம் தொடங்க இருப்பதாக நடிகை லைலா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி தெரிவித்துள்ளார்.

நடிகை லைலா கடந்த 2000 ஆண்டுகளில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் அவர் ஒரு படத்தில் கூட விஜய் உடன் இணைந்து நடிக்கவில்லை. ’உன்னை நினைத்து’ என்ற திரைப்படத்தில் விஜய் மற்றும் லைலா இணைந்து நடிக்க இருப்பதாக இருந்த நிலையில் போட்டோஷூட் புகைப்படங்கள் கூட வெளியாகின. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விஜய் விலகி விட அதன் பிறகு அந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் லைலா நடித்து வரும் நிலையில் அந்த படம் குறித்த முக்கிய தகவல்கள், தன்னுடைய கேரக்டர், விஜய்யுடன் இருக்கும் காம்பினேஷன் காட்சிகள் உட்பட சில விஷயங்களை நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கை, புதிய அத்தியாயம் இருக்கிறது என்றும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் ’உன்னை நினைத்து’ படத்திற்காக போட்டோஷூட் எடுக்கும்போது அவர் எப்படி இருந்தாரோ, அதே போல் தான் இன்றும் உள்ளார் என்றும் அவரிடம் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். நடிகை லைலாவின் முழு பேட்டியை பார்க்க இந்த வீடியோவை கிளிக் செய்யவும்.

More News

எனக்கு அரசியல் அறிவு இல்லை.. விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வர மாட்டேன்: விஜய் டிவி பிரபலம்..!

விஜய் டிவி பிரபலம் ஒருவர் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாகவும் அவர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில்

டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கும் 2வது படம்.. டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்த பிரபல நடிகர்..!

டிடிஎஃப் வாசன் ஏற்கனவே 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி டைட்டில் போஸ்டரும் வெளியாகி இணையத்தி

பாலசரவணன் ஹீரோ.. 'விக்ரம்' நடிகை ஹீரோயின்.. உதவி செய்த சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் சிலர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது காமெடி நடிகர் பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின்

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. விஜய் வாழ்த்து சொல்வாரா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே23' திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஹீரோ ஒருவர் இணைந்துள்ளதை அடுத்து இந்த ஹீரோ விஜய்க்கு

சிவபெருமான் பற்றிய அறியப்படாத உண்மைகள் - சிவ சதீஷ்குமார் விளக்கம்

சிவபெருமான் பற்றிய பல சுவாரஸ்யமான மற்றும் அறியப்படாத உண்மைகளை பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் சிவ சதீஷ்குமார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில்