42 வயதில் தலைகீழாக வொர்க்-அவுட்: நடிகை லைலாவின் வேற லெவல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை லைலா ஜிம்மில் தலைகீழாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
தமிழ் திரை உலகில் விஜயகாந்த் நடித்த ’கள்ளழகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் அஜித் நடித்த ’தீனா’ விக்ரம் நடித்த ’தில்’ சூர்யா நடித்த ’பிதாமகன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகி இருந்த லைலா கடந்த ஆண்டு கார்த்தி நடித்த ’சர்தார்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது அவர் ’சப்தம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை லைலா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் ஜிம்மில் தலைகீழாக பயிற்சியாளரின் உதவியுடன் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக் குவிந்து வருகிறது.
நடிகை லைலாவுக்கு 42 வயதாகும் நிலையில் இந்த வயதிலும் அவர் வொர்க்-அவுட் செய்து உடலை பிட்டாக வைத்திருப்பதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments