அதே சிரிப்பு, கொஞ்சம் கூட மாறவில்லை: நடிகை லைலா செல்பிக்கு ரசிகர்கள் பாராட்டு 

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000ல் பிஸியாக இருந்த நடிகைகளில் ஒருவர் லைலா. குறிப்பாக அஜித் நடித்த ’தீனா’, விக்ரம் நடித்த ’தில்’, சூர்யா நடித்த ‘பிதாமகன்’ உள்பட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை லைலா கடந்த 2006ஆம் ஆண்டு தொழிலதிபர் மெஹ்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லைலா தற்போது சினிமாவில் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ’உங்களுடைய சிரிப்பு இன்னும் அப்படியே இருக்கிறது கொஞ்சம்கூட மாறவில்லை’ என்றும் ’குழந்தை தனமான சிரிப்பு’ என்றும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


 

More News

'மேதகு' இயக்குனருக்கு இது தேவையா? நயன்தாரா ரசிகர்கள் காட்டம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படமான 'மேதகு' என்ற திரைப்படத்தை இயக்குனர் கிட்டு, தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா

தலைவர் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை: கஸ்தூரிக்கு ரஜினிகாந்த் பி.ஆர்.ஓ. பதில்!

தலைவர் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை என்றும், அவருடைய குடும்பத்தாரும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் கஸ்தூரியின் ட்வீட்டுக்கு ரஜினியின் பி.ஆர்.ஓ பதிலளித்து இருப்பது

அரசுப்பள்ளி முதல் என்கவுண்டர் வரை....! சைலேந்திர பாபுவின் திகைக்கவைக்கும் பின்னணி.....!

தமிழ்நாட்டின் 30-ஆவது டிஜிபி-(காவல்துறைத் தலைமை இயக்குனர்) ஆக இன்று பதவியேற்றுள்ளார் முனைவர் சைலேந்திரபாபு.

மணிகண்டன், நடிகை சாந்தினி சம்பவம்....! வாக்குமூலம் அளித்த மருத்துவர்....!

மாஜி அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினியை பிரபல தனியார்ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது குறித்த ஆதாரங்கள், தற்போது காவல்துறையினர் கையில் சிக்கியுள்ளது.

அதிபருக்கு 15 மாதம் சிறை தண்டனை? அதிர்ச்சி சம்பவம்!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவிற்கு அந்நாட்டு