யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி? PSBB பள்ளி விவகாரம் குறித்து குட்டிபத்மினியின் வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை குட்டிபத்மினி, நுங்கம்பாக்கம் வசந்தி குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது.
பத்ம சேஷாத்திரி ஸ்கூலில் சீட் வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தேன்... அப்போது ஒய்ஜிபி கூப்பிட்டதால், அவங்க ரூமுக்கு போனேன்.. ஏம்மா... நீ எல்லாம் கியூவில் நிக்கலாமா? இந்த ஸ்கூலுக்கு முதன்முதலில் பெரியவங்க எல்லாம் அடிக்கல் நாட்டும் போது, நீ அந்த டைம்ல வந்திருக்கிற, உன் கையால அடிக்கல் நாட்டியிருக்கிற... எனக்கு அது நல்லா ஞாபகம் இருக்கு.."ன்னு சொன்னார்.
பல சீரியல்ல ஆக்ட் பண்ணியிருக்கேன்... டிராமா, சினிமாவில் ஆக்ட் பண்ணியிருக்கேன்.. ஆனாலும் யாருகிட்டயும் போயி ஆப்ளிகேஷன் கேட்கிறது எனக்கு பிடிக்கவே பிடிக்காது... சீட் கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்... ஆனால் நடந்தது என்ன? என்னுடைய மகளுக்கு அட்மிஷன் எல்லாம் ஆயிருச்சி... ஸ்கூல்ல படிச்சிகிட்டு இருந்தாள். ஒரு மாசத்துக்கு அப்புறம் மேடம் கூப்பிடறாங்கன்னு சொன்னாங்க.. என் பொண்ணு சரியான வாண்டு.. என்ன பண்ணிச்சோ.. யார அடிச்சாளோ-ன்னு நினைச்சிக்கிட்டே ஸ்கூலுக்கு போனேன்.
அப்போ என்கிட்ட சொன்னாங்க, "நீ வருமானவரித்துறைக்கு சீரியல் பண்ணிக்கிட்டு இருக்கியே, ரொம்ப நல்லா இருக்கு... நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.. வருமான வரித்துறை சேர்மனை நீங்க மீட் பண்ணியிருக்கிறீர்களா?ன்னு கேட்டாங்க. "ஓ, நல்லா தெரியுமே.. அவரை பார்த்து தான் அப்ரூவலே வாங்கி இருக்கோம்... ஒவ்வொரு வாரமும் ஸ்டோரி எல்லாம் அவர் தான் கிளியர் பண்ணணும்"னு சொன்னேன்.
அவர்கிட்ட ஒரு சின்ன வேலை இருக்கு... எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தரமாட்டேங்கிறார்.. கொடைக்கானலில் ஒரு சொத்து வாங்கியிருக்கிறோம்... ஸ்கூல் அக்கவுண்ட்ல வாங்கியிருக்க வேண்டுமாம். ஆனால் வேறு ஒரு அக்கவுண்ட்ல வாங்கிட்டாங்களாம். சட்டப்படி அது தப்பு போல இருக்கும்... அதனால வருமான வரித்துறை பெரிய அளவில் வரி போட்டுட்டாங்க போல இருக்கு. அதனால அவரை பார்த்து பேசி எப்படியாவது அதை கரெக்ட் பண்ணி கொடுக்கணும்னு கேட்டாங்க.
அப்ப தான் எனக்கு புரிந்தது. இவங்க இதுக்காக தான் எனக்கு சீட் கொடுத்திருக்காங்க. உண்மையிலே என் மேல இருந்த அன்புனால கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன்" என்று குட்டி பத்மினி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை தொடர்ந்து குட்டி பத்மினி தனது டுவிட்டரில், ‘நுங்கம்பாக்கம் வசந்தியை கூப்பிட்டு விசாரிங்க.. என்னை போல எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது உங்களுக்கு புரியும் என்று பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த டுவிட் தான் பலரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. பலரும் யார் இந்த நுங்கம்பாக்கம் வசந்தி? இவரை ஏன் விசாரிக்க வேண்டும் என குட்டிபத்மினி கூறுகிறார் என்று தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தோண்ட தோண்ட இன்னும் பல புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#PSBB you must enquire Vasanthi from Nugambakkam many parents including me have gone through mental harassment
— Kutty Padmini (@KuttyPadhmini) May 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com