சாப்பாட்டை எல்லாம் வீடியோவா போடணுமா? குஷ்பு ஆதங்கம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தினந்தோறும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக ஒருசில நடிகைகள் தாங்கள் தயார் செய்யும் விதவிதமான உணவுகள் குறித்தும் வீடியோக்களை பதிவுசெய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். ஒரு வேளை சாப்பாட்டிற்கே ஏழை எளிய மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் விதவிதமான உணவு வகைகளை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்த வேண்டுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்கள் விரும்பிய உணவுகளை சாப்பிடுவதற்கு எந்தவித தடையும் இல்லை, நீங்கள் விதவிதமான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் அந்த உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தி விளம்பரம் தேட வேண்டாம் என்றும் குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏழை எளிய மக்கள் பசியால் துயரத்தில் இருக்கும் நிலையில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் இது போன்ற வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்றும் குஷ்பு உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். குஷ்புவின் இந்த சமூக வலைதள பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.