மீட்கப்பட்டது குஷ்புவின் டுவிட்டர்: முதல் டுவிட்டிலேயே யாருக்கு வாழ்த்து தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் பாஜக பிரபலமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென ஹேக் செய்யப்பட்டது என்றும், அவர் பதிவு செய்த அனைத்து டுவிட்டுகளும் அழிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானதை பார்த்தோம். இதனை அடுத்து நடிகை குஷ்பு சென்னை காவல்துறை டிஜிபியிடம் புகார் அளித்தார். குஷ்புவின் புகாரை அடுத்து ட்விட்டர் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் காவல்துறையினர் கடிதம் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மீண்டும் குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டது என்பது தெரியவருகிறது. மீட்கப்பட்டபின் முதல் டுவிட்டிலேயே இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்த வீராங்கனை மீராபாய்க்கு குஷ்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதைவிட எனக்கு வேறு ஒரு சந்தோசம் எதுவும் இல்லை என்றும் ஒலிம்பிக் வரலாற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இந்தியாவே உங்களுக்கு தலை வணங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது டுவிட்டர் பக்கத்தை மீட்க நடவடிக்கை எடுத்த டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறையின் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மற்றொரு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள டுவிட்டுக்களும் அனைத்தும் தற்போது மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
My gratitude to #DGP #ShylanderBabu ji and his team for their swift action and helping me to retrieve my Twitter account, safe and sound. ????????
— KhushbuSundar (@khushsundar) July 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com