பிரபல நடிகரின் பிறந்த நாளுக்காக செம்ம ஆட்டம் போட்ட குஷ்பு.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு செம ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.
பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவான திரைப்படம் ’ரணதீரா’. கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் தான் நடிகை குஷ்பு கன்னடத்தில் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அடுத்து குஷ்புவுக்கு கன்னடத்திலும் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று ரவிச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக ’ரணதீரா’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடிகை குஷ்பு நடனமாடியுள்ளார். மேலும் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு தான் கன்னட ரசிகர்களுக்கு நிறைய கடன் பட்டு இருப்பதாகவும் இந்த படத்தின் மூலம் தான் தனக்கு ஏராளமான கன்னட ரசிகர்கள் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
நடிகை குஷ்புவின் இந்த நடனத்தை பார்த்து 50 வயதுக்கு மேல் ஆகியும் குஷ்பு சூப்பராக நடனம் ஆடுகிறார் என்றும் இந்த படத்தில் பார்த்த மாதிரியே குஷ்பு இன்னும் இருக்கிறார் என்றும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிறது.
To all #Ranadheera fans out here!! #Ranadheera introduced me to Kannada and gave me millions of fan following, overwhelming appreciation, love that cannot be defined in words! I will always be indebted to Kannada audience for this and more. As our fav Ravichandran Sir celebrates… pic.twitter.com/JHiKsLvZVn
— KhushbuSundar (@khushsundar) May 30, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments