நடிகை குஷ்புவின் பியூட்டி சீக்ரெட்… இன்ஸ்டாகிராமில் அவரே பகிர்ந்த தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் 80-90 களின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்து, வாழும் காலத்திலேயே கோவில் கட்டும் அளவிற்கு தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை குஷ்பு. அவர் அழகு குறிப்பு ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 1989 இல் ‘வருஷம் 16‘ திரைப்படத்தின் மூலம் கதாநாயகி ஆனவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ் என்று 80-90 களில் வெளியான பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றார். தொடர்ந்து இளம் தலைமுறை ஹீரோக்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு மீது அதிக ஈர்ப்பு கொண்ட தமிழ் ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டிய வரலாறுகள் எல்லாம் ரசிகர்கள் அறிந்ததுதான். தமிழைத் தவிர தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்ற நடிகர்களுடனும் மலையாளத்தில் மோகன்லால் மம்முட்டி என்று முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் ஒருசில திரைப்படங்களின் துணை வேடங்களில் நடித்து வருகிறார். ஒருசில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுவரும் இவரை பப்ளி தோற்றத்திற்காகவே ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில் அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தற்போது ஸ்லிம் பியூட்டியாக மாறியிருக்கிறார்.
மேலும் சினிமாவைத் தவிர பாஜக நிர்வாகியுமாகவும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் முக அழகிற்காகவும் முடி பராமரிப்பிற்காகவும் நடிகை குஷ்பு ஒரு சிறந்த அழகு குறிப்பை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் வாழைப்பழம் தன்னுடைய முக அழகிற்கும் மிருதுவான தலைமுடிக்கும் உகந்தது என்று அவர் கூறியிருக்கும் தகவல் பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments