30 ஆண்டுகளா? என்னால் நம்பவே முடியவில்லை: குஷ்பு டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் குஷ்பு நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கே பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’அண்ணாமலை’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதனை படக்குழுவினர் கொண்டாடினர்.
’அண்ணாமலை’ படம் வெளியாகி 30 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சுரேஷ்கிருஷ்ணா நேரில் சென்று சந்தித்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’அண்ணாமலை’ படத்தில் நாயகியாக நடித்த குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் 'அண்ணாமலை என்னுடைய திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம். இந்த படம் 30 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ரஜினிகாந்த் அவர்களுடன் பணிபுரிந்ததை மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் உணர்கிறேன். சுரேஷ்கிருஷ்ணா அவர்களுக்கும் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Can't believe its been 30yrs to one of the most iconic movies of my career. #Annamalai
— KhushbuSundar (@khushsundar) June 27, 2022
What a joy & honor it was to work with @rajinikanth sir. And I definitely owe it to #SureshKrishna sir & Iyakkunar Sigaram #KBalachander sir. Thank you for all the love ❤️??#30yrsofAnnamalai pic.twitter.com/dkafQhrhAB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments