செய்தி தொடர்பாளர் பதவி பறிப்புக்கு குஷ்புவின் பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு இன்று மதியம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் முன் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சற்று முன் காங்கிரஸ் கட்சி எடுத்த அதிரடி நடவடிக்கையாக குஷ்புவின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது பதவி பறிப்புக்கு பதிலடியாக குஷ்பு தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார். அதில் அவர் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இடம் கொடுத்து தேசிய செய்தி தொடர்பாளர் என்ற பதவியும் கொடுத்ததற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தோல்வி அடைந்த நிலையிலும் தான் காங்கிரஸ் கட்சியில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் ஒரு சில தலைவர்கள் அடிமட்ட தொண்டர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருப்பதாகவும் அவர்கள் விதிமுறைகளை மீறி உத்தரவு பிறப்பித்தால் தான் இந்த கட்சியில் இருந்து வெளியேறி வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனக்கு ராகுல் காந்தி மீது மிகப் பெரிய மரியாதை உண்டு என்றும் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout