டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் அளித்த குஷ்பு: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Tuesday,July 20 2021]

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு இன்று டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்

நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் திடீரென மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது என்பதும் அவரது ட்வீட்டுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வேறொரு பெயரில் டுவிட்டர் பக்கத்தில் தோன்றி வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இது குறித்து புகார் அளிக்க டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை நடிகை குஷ்பு இன்று சந்தித்துள்ளார். காவல்துறையின் நடவடிக்கையால் விரைவில் தனது டுவிட்டர் கணக்கு மீட்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இது குறித்து நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: ’எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நான் எனது கணக்கில் நுழைய முடியவில்லை. இது குறித்து புகார் அளித்துள்ளேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை

இந்த நிலையில் இன்று காலை எனது பெயருக்கு பதிலாக இன்னொருவர் பெயர் மற்றும் டிபி எனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் எனது கணக்கை பயன்படுத்துகிறார் என தெரிகிறது. கடந்த மூன்று நாட்களில் எனது கணக்கில் ஏதேனும் செயல்பாடு இருந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என்பதை தயவு செய்து அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்

More News

வடிவேலு இல்லாமல் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? ரசிகர்கள் அதிருப்தி!

வடிவேலு நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஒன்றில் வடிவேலு நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஹீரோவை விட அதிக சம்பளம் வாங்கும் லிங்குசாமி பட வில்லன்!

இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் புதிய திரைப்படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

4 புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா: இரண்டு வருடங்களுக்கு பிஸி!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' மற்றும் 'நெற்றிக்கண்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் ஆன்ட்ரியா!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'வடசென்னை' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒரு

மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் இணைந்த நமிதா!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'பிசாசு' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக