மகளின் முக்கியமான புகைப்படத்தை வெளியிட்டு புளங்காகிதம் அடைந்த குஷ்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் குஷ்பு என்பதும், தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது மகளின் முக்கியமான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு புளங்காகிதம் அடைந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் குஷ்பூ இயக்குநர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் குஷ்புவின் மூத்த மகளான அனந்திகா, தற்போது கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். பட்டமளிப்பு விழா குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள குஷ்பூ, எனது மகள் பட்டம் பெற்று விட்டார், அவர் என் வயிற்றில் இருந்ததை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன் என்றும் அவள் பெரிய பெண்ணாகி நல்ல விதத்தில் பட்டம் பெற்று எங்களை பெருமைப்படுத்தி விட்டார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நீ ஒரு புதிய உலகில் இனிமேல் அடியெடுத்து வைக்கப் போகிறாய் என்றும், நீ ஒரு வலிமையான பெண் என்று எங்களுக்கு தெரியும் என்றும் உணர்ச்சிகரமாக கேப்ஷனை பதிவு செய்து புளங்காகிதம் அடைந்து உள்ளார் குஷ்பு. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com