4 மணிநேரம் கழித்து தான் என் கையில் கொடுத்தார்கள்: 20வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு

  • IndiaGlitz, [Wednesday,January 25 2023]

நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி குஷ்பூ தனது மகளின் 20வது பிறந்தநாளுக்காக தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர்சியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் குஷ்புவின் இரண்டாவது மகள் அனந்திதாவின் 20வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்ட பதிவாக குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நான்கு வாரத்திற்கு முன்பே பிறந்த உன்னை, நான்கு மணி நேரம் கழித்துதான் என் கையில் கொடுத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை உன் கையை பிடிக்கும்போது எல்லாம் உன் அன்பையும், அரவணைப்பையும் என்னால் உணர முடிகிறது. உன் பெயரை போலவே எங்களுக்கு நீ ஆனந்தத்தை அள்ளி தந்து கொண்டிருக்கிறாய். எங்கள் சின்னவளுக்கு 20-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குஷ்பு தனது மகளை கட்டி அணைத்துள்ள புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.