கொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவை நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 5000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பதும், தமிழகத்தில் மட்டும் 160 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனாவின் பலிக்கு விஐபிக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களும் தப்பவில்லை. அந்த வகையில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் மும்பையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இந்த தகவலை குஷ்புவே தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, பிக்பாஸ் போட்டியாளர் காஜல் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Very unfortunately my eldest sis-in-law lost her cousin to #Covid-19 in Mumbai.. it’s painful.
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments