தமிழ் திரைப்பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிர்வாகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட நடிகை ஒருவரிடம் ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜிவி பிரகாஷ் நடித்த ’புரூஸ் லீ’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை கீரித்தி கர்பண்டா. இவர் தற்போது தமிழில் ’வான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் கீரித்தி கர்பண்டா சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரது லக்கேஜை ஏர் இந்தியா நிர்வாகம் மாற்றி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது சமூக வலைப்பக்கத்தில் கீரித்தி கர்பண்டா கூறியபோது ’எனது லக்கேஜை மீண்டும் தொலைத்ததற்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எனது நன்றி. உங்கள் ஊழியர்களுக்கு பயணிகளிடம் எப்படி நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரிகத்தை முதலில் கற்றுக்கொடுங்கள்’ என்று டுவீட் செய்திருந்தார்.
இந்த டுவீட் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரது லக்கேஜ்ஜை கண்டுபிடித்து அவருடைய முகவரிக்கு அனுப்பி வைத்ததோடு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.
Dear @airindiain , thank u for losing my luggage, yet again. And maybe u need to teach your staff a thing or two about basic manners.
— kriti kharbanda (@kriti_official) February 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments