தமிழ் திரைப்பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிர்வாகம்!

  • IndiaGlitz, [Saturday,February 22 2020]

தமிழ் திரைப்பட நடிகை ஒருவரிடம் ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்த ’புரூஸ் லீ’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை கீரித்தி கர்பண்டா. இவர் தற்போது தமிழில் ’வான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் கீரித்தி கர்பண்டா சமீபத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றதாக தெரிகிறது. இதனை அடுத்து அவரது லக்கேஜை ஏர் இந்தியா நிர்வாகம் மாற்றி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது சமூக வலைப்பக்கத்தில் கீரித்தி கர்பண்டா கூறியபோது ’எனது லக்கேஜை மீண்டும் தொலைத்ததற்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எனது நன்றி. உங்கள் ஊழியர்களுக்கு பயணிகளிடம் எப்படி நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரிகத்தை முதலில் கற்றுக்கொடுங்கள்’ என்று டுவீட் செய்திருந்தார்.

இந்த டுவீட் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரது லக்கேஜ்ஜை கண்டுபிடித்து அவருடைய முகவரிக்கு அனுப்பி வைத்ததோடு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.

More News

அடப்பாவி, உன்னை போயி போராளின்னு நினைச்சேனே! கஸ்தூரி டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றிருந்தபோது

அச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்

கொல்லிமலை என்று சொன்னாலே நம்மையும் அறியாமல் ஒரு அச்சம் உள்ளூறத் தொற்றி கொள்வது இயல்புதான்.

ரஜினியை முதல்முறையாக பார்த்த தருணம்: கார்த்திக் நரேன் 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் நேற்று வெளியான 'மாஃபியா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது 

இந்த படம் சென்சாரில் எப்படி தப்பியது? த்ரிஷா படம் குறித்து கே.பாக்யராஜ் ஆச்சரியம்

நடிகை த்ரிஷா நடித்த படம் ஒன்று சென்சாரில் எப்படி தப்பியது என்பதே தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக கே பாக்யராஜ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புரமோஷனுக்கு வரவில்லை என்றால் சம்பளம் கட்: த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை

த்ரிஷா நடித்த 'பரமபதம் விளையாட்டு' படத்தின் புரமோஷன் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு எதிர்பாராத காரணத்தால் த்ரிஷாவால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது