close
Choose your channels

15 லட்சமும் போச்சு.. பாஸ்போர்ட்டும் போச்சு.. புலம்பும் அஜித், விஜய் பட நடிகை..!

Friday, May 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

15 லட்சமும் போச்சு, பாஸ்போர்ட்டும் போச்சு என கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் உடன் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட். அதன் பிறகு அஜித் நடித்த ’வில்லன்’ கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ சரத்குமார் நடித்த ’திவான்’ பிரசாந்த் நடித்த ’வின்னர்’ விஜய் நடித்த ’திருமலை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் இன்ஸ்டாகிராமில் கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ‘கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் விசாவுக்கு மனு செய்தேன். ஆனால் அவர்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பாஸ்போர்ட்டும் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று நிறுவனத்தின் ஊழியர்கள் சொல்கிறார்கள்.

நான் விசாவுக்கு விண்ணப்பம் செய்து ஒரு மாதம் ஆகியும் எனக்கு பாஸ்போர்ட்டும் கிடைக்கவில்லை விசாவும் கிடைக்கவில்லை. கடந்த 13ஆம் தேதி நான் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றிருக்க வேண்டும். என்னுடைய விமான டிக்கெட், ஹோட்டல் அறை அனைத்தும் தற்போது வேஸ்ட் ஆகிவிட்டது. எனக்கு விசா கிடைக்காததால் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மன உளைச்சலில் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment