கையில் சரக்குடன் கிளாமரில் கலக்கும் நடிகை கிரண்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Tuesday,May 16 2023]

நடிகை கிரண் கையில் சரக்குடன் கிளாமர் காஸ்ட்யூமில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சரண் இயக்கத்தில் உருவான ’ஜெமினி’ என்ற திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கிரண். அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ விஜய் நடித்த ’திருப்பாச்சி’ உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தார் ஒரு சில திரைப்படங்களில் அவர் கிளாமர் கேரக்டர்களில் குத்து பாட்டுகளுக்கும் நடிக்கும் நடிகையாக மாறினார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் கிரண், அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அதுமட்டுமின்றி தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்வதற்கு என்று தனி இணையதளம் தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கிரண் கையில் சரக்குடன் கிளாமர் காஸ்ட்யூமில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களை ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது.