பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினாரா கமல் பட நாயகி? 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை விஜய் டிவி நிர்வாகம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் இறுதிகட்ட போட்டியாளர்களின் பட்டியல் குறித்து ஏற்கனவே நாம் விரிவாக பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் இரண்டு நடிகைகள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ’புன்னகை மன்னன்’ படத்தில் நடித்த ரேகா மற்றும் ’அன்பே சிவம்’ படத்தில் நடித்த கிரண் ஆகிய இருவரும் இந்த சீசனில் போட்டியாளர்களாக இருப்பதால் இந்த நிகழ்ச்சி சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென நடிகை கிரண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகவிருப்பதாகவும், அவர் கேட்ட தொகையை விஜய் டிவி நிர்வாகம் கொடுக்காததால் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர் வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்த பதிவு ஒன்றை நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, அதன்பின் அந்த பதிவை அவர் டெலிட் செய்து விட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கோவா ட்ரிப் சென்ற விஜய் பட நடிகை டிரைவரை ஏமாற்றினாரா? பரபரப்பு தகவல்!

தளபதி விஜய் நடித்த 'போக்கிரி' படத்தில் இடம்பெற்ற 'என் செல்லப்பேரு ஆப்பிள்' என்ற பாடலில் நடித்திருந்தவர் கவர்ச்சி நடிகை முமைத்கான். இவர் 'வேட்டையாடு விளையாடு' 'கந்தசாமி' உள்பட பல படங்களில் ஒரு

முகக்கவசத்தில் வைத்து தங்கம் கடத்திய பலே கில்லாடி… சுங்கத் துறையிடம் மாட்டிக்கொண்ட பரபரப்பு!!!cc

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

UP யில் மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்!!! நாடு முழுவதும் அதிர்ச்சி அலை…

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி

திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசின் அறிவிப்பு குறித்து கடம்பூர் ராஜூ கருத்து!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் அமல்படுத்தப்படும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

வெற்றிமாறன் - கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரான ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றின் டைட்டில் 'புத்தம் புது காலை' என்று வைக்கப்பட்டிருந்த செய்தி குறித்து நேற்று பார்த்தோம்.