சின்னத்தம்பி குஷ்பூ ரிட்டர்ன்ஸ்.....! வைரலாகும் செல்பி புகைப்படம்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை குஷ்பூ தனது லேட்டஸ்ட் செல்பி புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து, பிரபல நடிகையாக 90-களில் வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. அன்றைய காலத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்த குஷ்பு-விற்கு, கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது ரசிகர்கள் திருச்சியில் கோவில் கட்டினர். அந்த அளவிற்கு அக்கால இளைஞர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தார். சினிமாவிற்கு பின் கலைஞர், சன் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை ஆங்கராக தொகுத்து வழங்கிய குஷ்பூ, ஒருசில ரியாலட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். சினிமாவில் வெற்றி பெற்றதற்கு ஈடாக, சின்னத்திரையிலும் முத்திரை பதித்து வந்தார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். பல வருடங்கள் கழித்து தலைவர் ரஜினிகாந்த்-துடன் "அண்ணாத்த" படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இத்திரைப்படம் கூடிய விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் உடல் எடையைக் குறைத்துக்கொண்ட குஷ்பூ, தனது சமீபத்திய செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் சின்னத்தம்பி படத்தில் வந்த லுக்கை போல மிகவும் ஒல்லியாக காட்சியளிக்கிறார். நடிகை திரிஷா இந்த புகைப்படத்திற்கு ‘ i love the sequence ' என்று கமெண்ட் போட்டுள்ளார். குஷ்பூவின் ட்ரான்ஸ்பமேஷனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
When hard work yields results, the happiness cannot be explained. ❤❤ pic.twitter.com/x68fEjFBTg
— KhushbuSundar (@khushsundar) August 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com