36 வருட பெஸ்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்… நடிகை குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
80களில் இருந்து தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை குஷ்பு. இவர் தற்போது பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதோடு அவரைப் பற்றிய நெகிழ்ச்சியான சில கருத்துகளையும் கூறி இருக்கிறார்.
சினிமா துறையில் நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் பிருந்தா. இவர் பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டரின் தங்கை என்பதும் ஒரு சிறந்த நடன பரம்பரையில் இருந்த வந்தவர் என்பதும் நமக்கு தெரிந்ததுதான். அந்த வகையில் பிருந்தா அவர்களும் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்து இருக்கிறார். அறிமுகம் நடிகர்கள் முதற்கொண்டு முன்னணி நடிகர்கள் வரை அவர்களுக்கு ஏற்றாற்போல நடனம் அமைத்துக் கொடுப்பதில் கில்லாடி என்ற பெயரையும் தட்டிச் சென்றவர்.
இன்று பிருந்தா மாஸ்டரின் பிறந்த நாளை ஒட்டி நடிகை குஷ்பு தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். கூடவே “கடந்த 86இல் முதல் முறையாகப் பார்த்ததில் இருந்து எங்களுக்கு இடையில் எதுவுமே மாறவில்லை. அப்பவும் என்னுடைய பெஸ்டி… இப்பவும் என்னுடைய பெஸ்டி… 36 வருடங்கள் கழித்தும் ஒரே மனநிலையில் இருக்கிறோம். இன்னும் நண்பர்களாக… குடும்பமாக… இணைந்து இருக்கிறோம். இத்தகைய அன்பிற்கு நான் என்னுடைய வாழ்க்கையில் ஏதோ நல்லது செய்து இருக்கிறேன். My Grounding factor My sanity Zone” என நெகிழ்ச்சியோடு பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறிக் கொண்டு இருக்கிறார்.
நடிகை குஷ்புவின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடனத்துறையில் சிறந்த விளங்கும் பிருந்தா முதல் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகி தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு “ஹே சினாமிகா” என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி ராவ், மணிரத்னம், குஷ்பு, கே.பாக்யராஜ் என பல முக்கியப் பிரபலங்கள் நடித்து இருப்பதாகத் தகவல் வெளியாகியது. கொரோனா காரணமாக இந்தப் படத்தில் அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com