வெற்றிப் படிகளில் நடிகை குஷ்புவின் அரசியல் பயணம்… ஒரு பார்வை!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியல் வாய்ப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. எனினும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரிய கட்சிகள் கூட 13 அல்லது 14 இடங்களை மட்டுமே ஒதுக்கி இருக்கின்றன. இந்நிலையில் தான் ஒரு சினிமா பிரபலம் என்பதையும் தாண்டி நான் ஒரு பெண், தனக்கு இல்லத்தரசிகளின் நிலைமை நன்கு புரியும் என்ற வார்த்தைகளை சுட்டிக்காட்டி ஆயிரம் விளக்கு தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் நடிகை குஷ்பு.
அவருடைய அரசியல் வாழ்க்கை என்பது கடந்த 2010 ஆம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி அறிமுகத்துடன் தொடங்கியது. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி அதன் தோழமை கட்சியான காங்கிரஸில் கடந்த நவம்பர் 16, 2014 ஆம் ஆண்டு இணைந்தார். இந்த இணைப்பு அவருக்கு நல்ல முன்னேற்றத்தை தரும் என நினைத்து அயராது உழைக்கவும் தொடங்கினார். இந்த உழைப்பு ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடையாளத்தை கொடுக்கும் எனக் கருதிய நிலையில் அது வெறும் கனவாக இருந்தது.
இந்நிலையில் காங்கிரஸில் இருந்து விலக முடிவெடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய கட்சியான பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதில் இருந்தே தேர்தல் களத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுவாக இருந்து வந்தது. இதையொட்டி மக்களை நேரில் சந்திப்பது, அவர்களுடைய குறைகளை கேட்டறிவது, சமூக விஷயங்களில் அதிக அக்கறை காட்டுவது போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் இறங்கி இருக்கும் அவருக்கு பெண்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருப்பதாக பாஜக சார்பில் கூறப்படுகிறது. மேலும் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் அவரை ஆரத்தி எடுத்த வரவேற்பதாகவும் மக்களுடன் நெருக்கமாக நடிகை குஷ்பு உரையாடி வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. இதையடுத்து ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு ஏகபோக வெற்றிப் பெறுவார் என்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புகழப்படுகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments