வெற்றிப் படிகளில் நடிகை குஷ்புவின் அரசியல் பயணம்… ஒரு பார்வை!

  • IndiaGlitz, [Thursday,March 25 2021]

அரசியல் வாய்ப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. எனினும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரிய கட்சிகள் கூட 13 அல்லது 14 இடங்களை மட்டுமே ஒதுக்கி இருக்கின்றன. இந்நிலையில் தான் ஒரு சினிமா பிரபலம் என்பதையும் தாண்டி நான் ஒரு பெண், தனக்கு இல்லத்தரசிகளின் நிலைமை நன்கு புரியும்  என்ற வார்த்தைகளை சுட்டிக்காட்டி ஆயிரம் விளக்கு தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் நடிகை குஷ்பு.

அவருடைய அரசியல் வாழ்க்கை என்பது கடந்த 2010 ஆம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி அறிமுகத்துடன் தொடங்கியது. எனினும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி அதன் தோழமை கட்சியான காங்கிரஸில் கடந்த நவம்பர் 16, 2014 ஆம் ஆண்டு இணைந்தார். இந்த இணைப்பு அவருக்கு நல்ல முன்னேற்றத்தை தரும் என நினைத்து அயராது உழைக்கவும் தொடங்கினார். இந்த உழைப்பு ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடையாளத்தை கொடுக்கும் எனக் கருதிய நிலையில் அது வெறும் கனவாக இருந்தது.

இந்நிலையில் காங்கிரஸில் இருந்து விலக முடிவெடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய கட்சியான பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதில் இருந்தே தேர்தல் களத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுவாக இருந்து வந்தது. இதையொட்டி மக்களை நேரில் சந்திப்பது, அவர்களுடைய குறைகளை கேட்டறிவது, சமூக விஷயங்களில் அதிக அக்கறை காட்டுவது போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் இறங்கி இருக்கும் அவருக்கு பெண்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருப்பதாக பாஜக சார்பில் கூறப்படுகிறது. மேலும் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் அவரை ஆரத்தி எடுத்த வரவேற்பதாகவும் மக்களுடன் நெருக்கமாக நடிகை குஷ்பு உரையாடி வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. இதையடுத்து ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு ஏகபோக வெற்றிப் பெறுவார் என்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புகழப்படுகிறார்.

More News

எனக்கு தங்கை பிறந்திருக்கின்றார்: 19 வயது 'வாணி ராணி' சீரியல் நடிகை மகிழ்ச்சி!

வாணி ராணி உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்த சீரியல் நடிகை ஒருவர் தனக்கு தங்கை பிறந்திருப்பதாக வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் சினிமா ஹீரோ போல் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி மகன்: வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி ஆரம்பத்தில் சில வாரங்கள் கலக்கினார் என்பதும்,

நீச்சல்குளம், கையில் கோப்பை: ஷிவானியின் 'சில்லிங்' மாலத்தீவு புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் தற்போது மாலத்தீவு சென்றுள்ளார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்

விரலோடு உயிர் கூட கோர்த்து: நயனின் ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள் என்பதும் 'நானும் ரவுடிதான்' படத்தில் ஆரம்பித்த

கில்லாடி, எட்டப்பன் அவர்.. நம்பாதீங்க...! முதல்வர் பிரச்சாரத்தில் காரசாரப்பேச்சு..!

அதிமுக-வின் ஆட்சியை கவிழ்க்க திமுக பக்கம் சென்ற செந்தில் பாலாஜியை யாரும் நம்ப வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.