குஷ்புவின் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை குஷ்புவின் வீட்டில் நிகழ்ந்த சோகத்தை அடுத்து திரையுலகினர் ரசிகர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு என்பதும் கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த குஷ்பு அதன்பின் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது அண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
தனது சகோதரரின் பயணம் முடிந்து விட்டதாகவும் அவரது அன்பும் வழிகாட்டலும் தனக்கு எப்போதும் இருக்கும் என்றும் வாழ்க்கையில் ஒவ்வொருவரின் பயணமும் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் அவர் வருத்தத்துடன் பதிவு செய்து உள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவை அடுத்து அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அவரது அண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
As much as you want your loved ones to be with you forever,time comes to say goodbye. My brother's journey has ended today. His love & guidance will always be us. I thank everyone who have prayed for him. As they say,the journey of life is decided by God. Rest in peace #Bhaijaan. pic.twitter.com/Ryh0AsaZRC
— KhushbuSundar (@khushsundar) December 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments