விஜய்யை அடுத்து அஜித் படத்திலும் கீர்த்தி சுரேஷ்?

  • IndiaGlitz, [Wednesday,February 24 2016]

ஒரே நேரத்தில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு பெரிய ஸ்டார்களுக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. அந்த வாய்ப்பு சமீபத்தில் ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு வாய்ப்பு தற்போது கீர்த்தி சுரேஷூக்கு கிடைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


'தெறி' படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தில் கீர்த்திசுரேஷ்தான் நாயகி என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அஜித் நடித்த ரீமேக் படம் ஒன்றிலும் நாயகியாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அஜித், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'வேதாளம்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், அதில் அஜித் நடித்த வேடத்தில் பவன்கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்தி வந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாகத்தான் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படத்திலும் கீர்த்திசுரேஷ்தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.