மைக்கேல் ஜாக்சி ஆகிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்… வேறலெவல் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர் தற்போது சூப்பர்ஸ்டார் நடித்த “அண்ணாத்த“ திரைப்படத்தில் தங்கையாக கலக்கி இருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.
“அண்ணாத்த“ திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் “போலோ சங்கர்” எனும் திரைப்படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த “சாணிகாயிதம்“ விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதேபோல தெலுங்கில் “குட் லக் சகி“ மலையாளத்தில் “மரைக்காயர்“ போன்ற படங்களும் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.
மேலும் தனது அப்பாவின் சொந்த தயாரிப்பில் உருவாகிவரும் “வாஷி“ எனும் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இப்படி தொடர்ந்து பிசியான நடிகையாக உலா வரும் இவர் தற்போது அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் helloween கொண்டாட்டத்தை நவம்பரில் கொண்டாடி உள்ளார். இதில் தொப்பியை படு ஸ்டைலாக தூக்கிப்போட்டு தலையில் மாட்டிய நடிகை கீர்த்தி சுரேஷின் குறும்புத்தனம் மைக்கேல் ஜாக்சனையும் மிஞ்சிவிட்டது.
உலக ரசிகர்களிடையே நடனத்திற்கு பெயர்பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். அவருடைய எவர்க்ரீன் மூன்வாக் ஸ்டைலில் Hat trick-ம் ஒன்று. தற்போது அதேபோல ஒரு Hat trick-ஐ நடிகை கீர்த்தி சுரேஷ் செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்று ரசிகர்களிடையே பாராட்டையும் குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com