மைக்கேல் ஜாக்சி ஆகிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்… வேறலெவல் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Friday,November 26 2021]

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர் தற்போது சூப்பர்ஸ்டார் நடித்த “அண்ணாத்த“ திரைப்படத்தில் தங்கையாக கலக்கி இருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.

“அண்ணாத்த“ திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் “போலோ சங்கர்” எனும் திரைப்படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த “சாணிகாயிதம்“ விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதேபோல தெலுங்கில் “குட் லக் சகி“ மலையாளத்தில் “மரைக்காயர்“ போன்ற படங்களும் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

மேலும் தனது அப்பாவின் சொந்த தயாரிப்பில் உருவாகிவரும் “வாஷி“ எனும் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இப்படி தொடர்ந்து பிசியான நடிகையாக உலா வரும் இவர் தற்போது அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் helloween கொண்டாட்டத்தை நவம்பரில் கொண்டாடி உள்ளார். இதில் தொப்பியை படு ஸ்டைலாக தூக்கிப்போட்டு தலையில் மாட்டிய நடிகை கீர்த்தி சுரேஷின் குறும்புத்தனம் மைக்கேல் ஜாக்சனையும் மிஞ்சிவிட்டது.

உலக ரசிகர்களிடையே நடனத்திற்கு பெயர்பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். அவருடைய எவர்க்ரீன் மூன்வாக் ஸ்டைலில் Hat trick-ம் ஒன்று. தற்போது அதேபோல ஒரு Hat trick-ஐ நடிகை கீர்த்தி சுரேஷ் செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்று ரசிகர்களிடையே பாராட்டையும் குவித்து வருகிறது.

More News

'ஜெய்பீம்' படம் பார்த்த நல்லக்கண்ணு:  சிவகுமார், சூர்யாவை சந்தித்து வாழ்த்து!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் ஒரு சில அரசியல் அமைப்புகள் இந்த படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன

ப்ரீ வெட்டிங் போட்டோஷுட்… ஜிம்மில் நடத்தி கெத்துக்காட்டிய மணப்பெண்!

திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட் நடத்தும் விஷயம் தற்போது பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்காக காடு, மலை

100 கிலோ உடல்எடையுடன் மிகவும் சிரமப்பட்டேன்… மனம் திறந்த பிரபல நடிகர்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் நடிகர் அபிஷேக் பச்சன்.

நீ மேலே இருந்து என்னை பார்க்கிறாய் என்று தெரியும்: விபத்துக்கு பின் முதல் நிகழ்ச்சியில் யாஷிகா!

நடிகை யாஷிகா கடந்த ஜூலை மாதம் கார் விபத்து ஒன்றில் சிக்கினார் என்பதும் இந்த விபத்தில் அவரது உயிர் தோழிகளில் ஒருவரான பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்பதும் தெரிந்ததே.

சென்னையில் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் இன்றும் வரும் நாட்களிலும் சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரம்