close
Choose your channels

வேறலெவல் பேஷன் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்… ரசிகர்களை ஈர்த்த புகைப்படம்!

Monday, September 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “மகாநடி” திரைப்படத்தில் நடித்து தேசிய விருதுபெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு வெற்றிப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதைத்தவிர மலையாள சினிமாவிலும் கால்பதித்துள்ளார்.

இப்படி நடிகை கீர்த்தி சுரேஷ் பிசியான நடிகையாக வலம் வந்தாலும் சோஷியல் மீடியாவிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தனது செல்ல நாய்க்குட்டி Nyke யின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதைத்தவிர சில போட்டோ ஷுட் புகைப்படம், யோகா மற்றும் வொர்க் அவுட் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நீயூ பேஷன் உடையணிந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளன. நீல நிறத்தில் இவர் அணிந்துள்ள உடைக்கு ஏற்றவாறு நெக்லஸையும் அணிந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் முதல் முறையாக நடிக்கும் “சாணிகாயிதம்“ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அதேபோல சூப்பர் ஸ்டாருடன் இவர் நடித்த “அண்ணாத்த”, தெலுங்கில் பிரபல நடிகர் மகேஷ்பாபு உடன் இணைந்து நடித்திருக்கும் “ சர்காரு வாரிபாட்டா“, மலையாளத்தில் பிரபல நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கும் “மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்“ போன்ற திரைப்படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

தற்போது நடிகர் சூர்யா தயாரிப்பில் இயக்குநர் பாலா இயக்கவிருக்கும் புதுப்படம் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இவர் பதிவிட்டு உள்ள நியூ பேஷன் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment