close
Choose your channels

400 வாட்ஸ் பல்ப் போல மின்னுறாங்களே… தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

Monday, May 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் இளம் நடிகை ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தாறுமாறான கமெண்ட்ஸ்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், மலையாள மொழி சினிமாக்களில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவருகிறார். தமிழில் அவர் ‘ரஜினி முருகன்’, ‘தொடரி‘, ‘ரெமோ‘, ‘பைரவா‘ என்று பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் ‘மகாநடி’ திரைப்படத்தில் நடித்து தற்போது இந்திய அளவில் பிரபலமாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது உடல்எடையை வெகுவாக குறைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய வொர்க் அவுட், யோகா புகைப்படங்களைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அதோடு பேஷன் டிசைனில் ஆர்வம் கொண்ட அவர் தொடர்ந்து விதவிதமாக ஆடைகளை அணிந்து போட்டோ ஷுட் எடுப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சில்வர் நிறத்திலான சேலையை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் 400 வாட்ஸ் பல்பு போல மின்னுகிறீர்களே… சேலையில் கூட இவ்வளவு அழகாக இருக்கீங்களே… மார்டன், டிரெடிஷனல் என்று இரண்டுமே உங்களுக்கு அழகாக இருக்கிறது என்று பாராட்டி தாறுமாறாக கமெண்ட்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment