ஒற்றை கம்பியில் இரண்டு கையையும் விட்டுவிட்டு பம்பரமாக சுற்றும் நடிகை.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒற்றைக் கம்பியில் இரண்டு கையையும் விட்டுவிட்டு பம்பரம் போல் சுழலும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. அருண்பாண்டியன் தயாரித்து நடித்த ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார் என்பதும் அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் நடிகை கீர்த்தி பாண்டியன் ஒற்றை கம்பியில் சுழலும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் இரண்டு கையையும் விட்டுவிட்டு வெறும் கால்களின் பேலன்ஸில் மட்டும் சுற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாவில் கூறிய போது ’துருவ இயக்கம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு நிறைய மன மற்றும் உடல் பயிற்சி தேவைப்படுகிறது. வலிமையை கட்டியெழுப்பவும், சீராக இருக்கவும் இந்த பயிற்சி உதவும். இந்த பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கற்றுக் கொண்ட கலை வடிவங்களில் இதுவும் ஒன்று. எனக்கு இந்த கலையை மிகவும் பொறுமையாகவும் அற்புதமாகவும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இந்த கற்றல் அனுபவம் எனக்கு மிகவும் அபூர்வமாக இருந்தது’ என்று கூறியுள்ளார். கீர்த்தி பாண்டியனின் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments